ADDED : மே 26, 2010 01:50 AM
நாமக்கல்: விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது.
பகுதிக்குழு தலைவர் மதுரைவீரன் தலைமை வகித்தார். உதவி செயலாளர் பச்சமுத்து வரவேற்றார். நிர்வாகிகள் குப்பம்மாள், கொண்டன், பெருமாள், சுந்தரி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதிக்குழு செயலாளர் ராமசாமி, சி.பி.ஐ., பிரதேசக்குழு செயலாளர் ரங்கசாமி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.